ஷண்முக சுப்ரமணிய சுவாமி
மாசி கிருத்திகை பால்குடம் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகை
பழமையான பெரும்பேர்கண்டிகை மலை மீது, தெற்கு நோக்கி காட்சியளிக்கும்,
வள்ளி தெய்வானை சமேத சர்வசத்ரு சம்ஹார ஷண்முக சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.நேற்று, மாசி மாத கிருத்திகையையொட்டி 150 ஆம் ஆண்டு, பால் காவடி மற்றும் பால்குடம் எடுத்தல் விழா நடந்தது. பின்பு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையும், மஹா தீபாரதனை மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில்
நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, வானவேடிக்கையுடன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், வள்ளி, தேவசேனா சமேதராய் ஆறுமுகசாமி திருவீதி
உலா நடைபெற்றது. விழாவில் கிராம முழுவதும் வீடு தோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இரவு, தெய்வீக நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் மதுராந்தகம் காவல்துறை கண்காணிப்பாளர் மேகலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.