வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில்தனியார் திருமண மண்டபத்தில் துறையூர் தொகுதி இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் விருகை டாக்டர் வி என் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 22 /03 /2025 அன்று நடைபெற உள்ள 11வது ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் எழுச்சி மாநில மாநாட்டில் அமைச்சர்கள்,கட்சித் தலைவர்கள், வாரிய தலைவர்கள், பல்வேறு சங்கத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் ,ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
ஆகவே நமது சங்கத்தை சேர்ந்த தொழில் முனைவோர்,தொழில் அதிபர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அதிகளவில் மாநில மாநாட்டில் கலந்து கண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய சங்கத் தலைவராக பாபு என்கின்ற அ.சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.கூட்டத்தில் துறையூர் தொகுதி செயலாளர் சி. ராஜதுரை, பொருளாளர் எஸ்.செந்தில்குமார்,அவைத்தலைவர் கே.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொருளாளர் டயர் சரவணன்,களப்போராளி எஸ்கே ராஜா,வடக்கு மாவட்ட தலைவர் திருமுகம், செயலாளர் எம்பிடிசி கண்ணன்,பொருளாளர் டிங்கர் செல்வம், செயற்குழு உறுப்பினர் நந்தகுமார்,அம்மன் கிருஷ்ணகுமார், மீசை பாலு, சதீஷ்குமார்,அண்ணாமலை பாலு, அரசு ராமு, சதீஷ்குமார், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்,உறுப்பினர்கள் அனைவருக்கும் மாநில தலைவர் விருகை வி.என். கண்ணன்
மாநில மாநாடு அழைப்பிதழை வழங்கினார்.