தென்காசி லைஃப் மற்றும் எஸ்எஸ் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி பண்ணை இணைந்து நடத்திய மகளிர் தின விழா செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடந்தது
இவ்விழாவில், மாணவிகளின் கவனிக்கும் திறனை வளர்க்கும் விதமாக குழு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக பலூன் உடைத்தல் போட்டி நடத்தப்பட்டது.
போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு தென்காசி லைஃப் பேஜின் கவுரவ ஆலோசகர் ஷேக் முகைதீன், தென்னக்கன்றுகள், புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார். மேலும் குத்துச்சண்டை, சிலம்பாட்டம், டேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தென்காசி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் Dr.விஜயலட்சுமி, மாணவிகள் வெறும் கல்வி மட்டுமின்றி, தனித்திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா மற்றும் ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.