தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாநகராட்சி கிளையின் சார்பில் மூட்டா அரங்கத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி கிளையின் வட்டார தலைவர் சித்ரா தலைமையற்றார்.
வட்டாரத் துணை நிர்வாகி வாணி வரவேற்றார். ஜெயசித்ரா, எமிமாள் ஞானசெல்வி, பாண்டி உமாதேவி, தனபாக்கியம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டாரச் செயலாளர் ஜோசப் ஜெயசீலன் சங்கத்தில் பெண்களின் பங்கு பற்றி பேசினார். முருகேசன் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதுரை மாநகராட்சியில் துணை மேயர் நாகராஜன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்ணுரிமை என்பது மனித உரிமையே என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியதோடு 102 பெண் ஆசிரியர்களுக்கு மகளிர் சாதனை விருது வழங்கி கௌரவித்தார்.
விழாவின் சிறப்புகள் பற்றி ரேவதி, அரசுமணி, சுகந்தி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிகளை வட்டாரத் துணை நிர்வாகி ரீட்டா ராணி மற்றும் மதுரை மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ஜெயமுருகன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மதுரை மாநகராட்சி தத்தனேரி ஆரம்பப்பள்ளியின் தலைமையாசிரியர் சுவேகா நன்றி கூறினார்.
விழாவில் மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பல்வேறு ஒன்றியங்களை சார்ந்த ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்