கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக “க்ளஸ்டர்ஸ் 2K25′ Clusters 2k25 எனும் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது…

கல்லுாரி முதல்வர் முனைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ,இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரசுவதி மற்றும் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலாளர் முனைவர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தனர்..

முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில்,முதுகலை பயன்பாட்டியல் கணினி துறை இயக்குனர் முனைவர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்..

இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) துணைத் தலைவர் முனைவர் அபய் ஜெரே கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே கலந்துரையாடினார்…

அப்போது பேசிய அவர்,மாணவர்கள் கல்லூரியில் பயிலும் போதே தங்களது திறன்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரை வழங்குதல் தொழில்நுட்ப விநாடி வினா மார்க்கெட்டிங் பிழை திருத்துதல் வலை அமைப்பு போன்ற மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமான போட்டிகள் நடைபெற்றன..

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர் இதில் சிறந்த தனி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில் முதுகலை கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர் ரேவதி மற்றும் இணை பேராசிரியர்கள். லதா, சுலோச்சனா,வெங்கடாசலம் உட்பட மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி இறுதியில் மாணவர் ஆதிநாராயணசுவாமி நன்றியுரை வழங்கினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *