செல்வநாயகபுரம் ஊராட்சியில் குடிநீர்தட்டுபாடு நடவடிக்கை எடுக்க தவெக கோரிக்கை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது,
இதில் மகளிர்க்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலளர் விஜித் அனைவரையும் வரவேற்றார் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைமை எம்.மதன் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசத் தொடங்கிய மதன் மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை சரியாக செய்யாமல் கொள்ளை அடிப்பதகவும் அதனை மக்கள் கேள்வி கேக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரிவித்தனர்.
உங்களின் குறைகளை எங்களிடம் சொல்லுங்கள் சரி செய்து தருகிறோம் எனகூறிய அவர் பொதுமக்களில் குறைகளை கேட்டறிந்தார், அதில் படிக்காத பெண்கள்100 நாள் வேலை திட்டத்தை நம்பி இருக்கிறோம் ஆனால் எங்களுக்கு சரியாக வேலை கொடுக்காததால் சிரமபடுகிறோம் என்று தெரிவித்தனர்,
அதனை தொடர்ந்து பேசிய பொதுமக்கள் குடிநீர் வசதி எங்கள் கிராமத்தில் இல்லை என்றும் கண்ணீர் உடன் கோரிக்கை வைத்தனர் அதனை தொடர்ந்து த வெ க நிர்வாகிகள் கிராம மக்களுடன் சேர்ந்து குடிநீர் வேண்டும் என்று காலி குடத்தை வைத்து போராட்டம் செய்தார்கள்
அந்த கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருகிறோம் என்று மக்களிடம் த.வெ.க ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொருப்பாளர் மதன் நாங்கள் அதனை விரைவாக செய்து தருகிறோம் என்று அவர்களுக்கு உறுதி அளித்தனர்