தேவர் ஜெயந்தி விழாவை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கமுதியில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் முப்பெரும் விழாவில் பொதுச்செயலாளர் கர்ணன் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கமுதியில் பெருமாள் கோவில் திடலில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் ஸ்தாபகர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129வது பிறந்தநாள் விழா, மாவீரன் பகவத்சிங் நினைவு தினம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் தரைக்குடி கே.ஆர் லட்சுமணன் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் சுரேஷ்தேவர்,மாவட்ட துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடாசலம், மாவட்ட துணைச் செயலாளர் கே. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட இளைஞரணி தலைவர் இளையமறவன் முனீஸ்வரன் அனைவரையும் வரவேற்று பேசினார்,
மத்தியக் குழு உறுப்பினர் திருப்பூர் இராஜசேகரன், டி.யு.சி்.சி மாநிலத் தலைவர் நல்லமுத்து ,மாநில மாணவரணி செயலாளர் எம். கொம்பையா பாண்டியன், டி.யு.சி.சி.மத்திய குழு உறுப்பினர் தேளி காளிமுத்து, ஆலடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தி.கோபித்தேவர், டி.யு.சி.சி.மாநிலச் செயலாளர் அழகுமலை, தேனி மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.சக்கரவர்த்தி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆழிக்குடி மாரிபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் செண்பகராஜ், நெல்லை மாவட்ட தலைவர் மணித்தேவர், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சில்வர் பாண்டியன் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்தாக கமுதி எட்டுக்கண் பாலத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மிகப்பெரிய அளவில் வான வேடிக்கை, சிலம்பாட்டம், தப்பாட்டம், ஆகியவற்றின் மூலம் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டு பேருந்து நிலையத்திலிருக்கும் தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மாநாட்டு மேடை வரை மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. முப்பெரும் விழா
கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் சப்பானிமுருகேசன் தலைமையில் மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச அரிசி, சேலை, போர்வை, உணவு பொருட்கள், வழங்கப்பட்டது.
தேசிய செயலாளர் திண்டுக்கல் பி.எஸ் ஜெயராமன், தேசிய செயலாளர் மாநில பொருளாளர் ஸ்ரீவை சுரேஷ்தேவர், மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் கர்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தியாக வரலாறுகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் கட்சியின் ஸ்தாபகர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மாவீரன் பகத்சிங் ஆகியோரின் தியாகத்தை பற்றியும், இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மும்மொழி கொள்கையை திணிப்பு பற்றியும், தமிழகத்தில் பசும்பொன் தேவர் திருமகனார் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை இருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் நீண்ட கால கோரிக்கையான மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய பெயரையும், மதுரை திருநகரில் தேவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு அருங்காட்சியமாகவும், பல்வேறு துறையில் சாதிக்கும் சான்றோர்களுக்கு தமிழக அரசு பசும்பொன் தேவர் பெயரில் விருதும், தேவர் திருமகனார் ஜெயந்தி விழாவை தேசிய அரசு விடுமுறை தினமாகும் அறிவிக்க வேண்டும், பி.சி.ஆர் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தடுக்க குண்டாறு- காவேரி -வைகை ஆறுகளை இணைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கே.எம் மூர்த்தி, சுபஸ்ரீ மணி, இருளாண்டி, பாண்டி மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள் கமுதி ஒன்றிய பொறுப்பாளர் பி.எம்.சித்தன்ஜி நன்றி கூறினார்.