பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.2.19 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குன்னம், மருவத்தூர் எழுமூர், வரகூர், புதுவேட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ரூ.2.19 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர்

தெரிவித்ததாவது…..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கிராமப்புறம், மற்றும் நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையிலான திட்டங்களை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கின்றார்.

இன்று குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் மருவத்தூர் ஊராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 1,00,000லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பேரளி ஊராட்சி மருவத்தூர் புதிய காலனியில், கனிமவள நிதியின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, எழுமூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புது வேட்டக்குடி கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் 30,000லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குன்னம் ஊராட்சியில் மேலமாத்தூர் – வரிசை பட்டி சாலையில் மாநில பேரிடர் மேலாண்மை நீதி திட்டத்தின் கீழ் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் பம்ப்ரூமுடன் கூடிய புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து குன்னம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வரை பைப்லைன் அமைக்கப்பட்டுள்ள பணி ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும், எழுமூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நேரடி கொள்முதல் நிலையம், வரகூர் ஊராட்சி கொளப்பாடி சாலையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் ரூ.37.93 லட்சம் மதிப்பீட்டில் பம்ப் ரூமுடன் கூடிய புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் வரகூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பேரளி ஊராட்சியில் புதிய நியாய விலைக் கடை உள்ளிட்ட 08 பணிகள் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


மேலும், மருவத்தூர் ஊராட்சி, மருவத்தூர் பழைய காலனியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.17 லட்சம் மதிப்பீட்டில் குடிநீருக்காக புதிய பைப் லைன் அமைக்கும் பணி, அசூர் ஊராட்சியில் சக்தி வீடு முதல் சிவன் கோவில் வரை ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.10.48 லட்சம் மதிப்பீட்டில் 02 புதிய புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.


இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.தேவநாதன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், அறிவழகன், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி முன்னாள் ஊராட்சி குழு துணைத் தலைவர் மதியழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மரு.கருணாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *