C K RAJAN Cuddalore District Reporter
9488471235
கடலூர், பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடவுசெய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ) துவக்கி வைத்தார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச்சூழலினை பாதுகாத்திடவும், தட்பவெப்ப நிலையினை சீராக பராமரித்திடவும், மண் அரிப்பினை தடுத்து நில வளத்தினை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காகவும் பசுமை போர்வை அளவினை அதிகரித்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாகத் கடந்த ஆண்டு பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் பசுமை மன்றம் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
நடப்புக் கல்வியாண்டில், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மூலம் பெரியார் கலைக் கல்லூரியில் 3 ஏக்கர் பரப்பளவில்,ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கொய்யா, மகோகனி, இலுப்பை,பலா, புன்னை,வேம்பு, புங்கம்,நாவல் போன்ற 500 மரக்கன்றுகள் நடும் பணி நேற்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மரக்கன்றிற்கும் ஒரு மாணவர் காப்பாளராக நியமிக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் நடைபெறும். காடு செழித்தால் நாடு செழிக்கும். நாடு செழித்தால் உணவு உற்பத்தி உயரும், சீரான காலநிலை உருவாகும். இயற்கையைப் பாதுகாப்பது மாணவர்களின் கடமை இயற்கையே எதிர்காலம்.மரம் வளர்ப்பதில் மாணவர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது,கல்லூரி முதல்வர் இரா.ராஜேந்திரன், பேராசிரியர்கள் கு.நிர்மல்குமார், மா.ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.