திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் செம்பியன் கூந்தலூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகா மகா காளியம்மன் ஆலயத்தின் ஜீரணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..
முன்னதாக செம்பியன் கூந்தலூர் பகுதியில் உள்ள கிராம தேவதைகளான ஸ்ரீ ரேணுகா மகா காளியம்மன், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ சட்டைக்கார சாமி ஆலயங்கள் புனரமைக்கப்பட்டது.. நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு..
முன்னதாக, 09. 03. 2025 அன்று காலை விநாயகர் வழிபாடு, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூமி தேவி பூஜை நடைபெற்ற பின்.. முதல் கால பூஜை தொடங்கி நடைபெற்றது..
தொடர்ந்து 10.03. 2025 காலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது..
அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து.. பரிவார தெய்வங்களான சித்தி விநாயகர்,ஸ்ரீ ஐயனார்,ஸ்ரீ சாட்டைக்கார சுவாமி ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் அருள்மிகு ரேணுகா காளியம்மன் ஆலய விமானம் சென்றடைந்தது.. அதனை தொடர்ந்து சரியாக 10. 20 மணியளவில் விமான கலசத்திற்கு புனித ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிறகு மூலவரான அருள்மிகு ரேணுகா மகா காளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று… தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் செம்பியன் கூந்தலூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செம்பியன் கூந்தலூர் கிராமத்தில் உள்ள மேலதெரு கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர் செம்பியன் கோபி முன்னின்று நடத்தினார்