35 லட்சம் மதிப்பீட்டில்
அரசு துணை சுகாதார நிலையம் முதலமைச்சர் காணொளி மூலம் திறப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே சிறுபேர்பாண்டி ஊராட்சியில் பொது மக்களின் நீண்டநாள் கோரிகையை ஏற்று அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
சிறுபேர்பாண்டி ஊராட்சியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு துணை சுகாதார நிலையம் காணொளி காட்சிமூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ச.சுதாகர் துணைத் தலைவர் கோ.பழனி
மற்றும் வட்டார மருத்துவர் டாக்டர் சுரேஷ்,சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன்,
மருத்துவர் பிரியதர்ஷினி, செவிலியர்கள் மீனா பாலசுதாம்பாள்,உட்பட வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.