செய்யூர் அருகே செங்காட்டூர் கிராமத்தில் கோட்டை மேடு பகுதியில் வசித்து வரும்
மலையப்பன் (73) என்பவர் நேற்று இரவு (மார்ச் 11) பவுஞ்சூர் முதல் செய்யூர் வரை செல்லும் சாலையில் பாக்குவாஞ்சேரி பஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழிந்துள்ளார். தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெறிவித்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான நபர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
