திருவொற்றியூர் மார்ச் 12 மணலி மண்டலத்தை நீக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

தமிழக அரசு சென்னையில் உள்ள மண்டலங்கள் எண்ணிக்கை இருபதாக உயர்த்தி உள்ளது ஆனால் ஏற்கனவே இருந்த மணலி மண்டலத்தை பிரித்து திருவொற்றியூர் மற்றும் மாதவரத்திற்கு வார்டுகளை மாற்றுகிறது இதனால் மணலி மண்டலம் நீக்கப்படுகிறது இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மணலியில் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

வியாபாரிகள் சங்கம் சார்பில் துண்டறிக்கைகள் போஸ்டர்கள் ஒட்டியுடுள்ளனர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து தங்களது மண்டலத்தை பிரிக்க கூடாது என மனு அளித்தனர்

இந்த நிலையில் இன்று காலை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் முல்லை ராஜேஷ் ஸ்ரீதரன் ஆகியோர் மண்டலம் பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலக வாயிலில் போராட்டம் நடத்தி வருகின்றனர் போராட்டம் இது குறித்து முல்லை ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது மணலி மண்டலம் நீக்கப்படுவதால் மணலி பகுதி நிச்சயமாக நிர்வாக ரீதியாக பாதிக்கப்படும் மழைக்காலங்களில் நாங்கள் திருவொற்றியூருக்கோ மாதவரத்துக்கோ எளிதில் செல்ல முடியாது மணலியில் மண்டல அலுவலகம் இருந்தால் எங்களது தேவைகளை உடனே செல்ல முடியும் குறிப்பாக அணை திறக்கும் போது நேரடியாக மணலி தான் பாதிக்கப்படும் அப்போது எங்களால் எளிதில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத ஒரு சூழல் ஏற்படும் எனவே அரசு இது குறித்து மறுபரிசலனை செய்ய வேண்டும் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *