க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக நடைபெற்றது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் திருப்பத்துார் பஸ் நிலையம் அருகே நடந்தது.
துணை அமைப்பாளர்கள் கணேஷ்பாபு,வேல்முருகன், தமிழரசன் முன்னிலை வகித்தனர்.பிரேம்குமார் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜி கலந்து கொண்டு திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள், திருப்பத்துார் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
தலைமை கழக பேச்சாளர் பிரபு பேசுகையில் திராவிட மாடல் அரசு என்பது சாதாரண மக்களையும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்வது தான்.
ஆனால் மத்திய ஆளும் ஒன்றிய அரசு குல கல்வியை கொண்டு வருவதற்காக தான் புதிய கல்வி கொள்கையை கொண்டு வர துடிக்கிறது. என்றார். ஆனால் இந்த அரசு அதை எதிர்க்கும் என்றார்.
இதில் நகராட்சி சேர்மன் சங்கீதா வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர் அரசு, மாவட்ட துணை செயலாளர் மோகன், இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், அசோக்குமார், குணசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வசந்த்ராஜ் நன்றி கூறினார்.