கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம், வட்டார மருத்துவ அலுவலர் மோகனவள்ளி அவர்களின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மையத்தின் சார்பில் சின்னதாராபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மிக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன். ஜெயராம், மாவட்ட பொருளாளர் எல். பாலசுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளர்கள் இளங்கோ, சங்கர்,எம். பாஸ்கர், தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பி.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் மாவட்ட தலைவர் ஆர்.பிரேம்குமார் , தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சதீஸ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவகாமி , தமிழ்நாடு தி ரேடியாலஜிக்கல் அசிஸ்டென்ட்ஸ் அசோசியேஷன் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார், தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்தி தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு துறை வாரிச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆ.அம்சராஜ் கண்டன உரை ஆற்றினார்.