கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் ஜவகர் பஜாரில் அமைந்துள்ள பாரதமாதா ஸ்டோர் முன்பாக துவங்கிய
சமக்கல்வி எங்கள் உரிமை !அதை கொடுப்பது அரசின் கடமை !
பாரத பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தை ஆதரித்து அண்ணாமலை முன்னெடுத்துள்ள மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கரூர் மத்திய மாநகரம் சார்பாகவும், கரூர் மாவட்ட மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.வடிவேலு ,முன்னாள் மாவட்ட தலைவர் OBC அணியின் மாநில துணைத்தலைவர் சிவசாமி,
முன்னாள் மாவட்டத் தலைவர் லாலாபேட்டை முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட பொதுச் செயலாளர் குமார், மாவட்ட துணைத் தலைவர் செல்வன், மாநில பிரச்சார பிரிவு Kvr ராஜேஷ் , மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் செயலாளர் சந்திரசேகர், ஹிந்து முன்னணி கரூர் மாநகரத் தலைவர் ஜெயம் கணேஷ் மற்றும் மாவட்ட, மண்டல, மத்திய, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து பேரியக்கத்தில் அரசுபள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன், மற்றும் ஆர்வத்துவுடன் கையெழுத்திட்டனர்..