செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுராந்தகம்
அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சரவம்பாக்கம் பஜார் வீதிகளில் அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் சிறு குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தாசலம்,
மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்
எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வரவிருக்கும்
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி
பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.டி.ரங்கநாதன்,
காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சோத்துப்பாக்கம் ராஜசேகர்,ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செய்யூர் ஜெயச்சந்திரன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பேரம்பாக்கம் கி.அன்பு,மதுராந்தகம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர்
பாக்கம் மாசி,ஒன்றிய கழக செயலாளர்கள் கீழ்மருவத்தூர் பூபதி
மருத்துவர் ரங்கராஜன் வழக்கறிஞர் குணசேகரன் ஒன்றிய மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் சேவல் ச.இராம்பிரசாத்,வழக்கறிஞர் பாக்யராஜ்
ரா.எல்லன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.