
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்ற தொகுதி ரெட்டியார் பாளையம் ஜெயா நகர், அணைக்கரை வீதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி படி தன்னுடைய சொந்த செலவில் கொசு மருந்து அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதுச்சேரி மேற்கு மாநில கழக இணை செயலாளர் லாவண்யா அவர்கள் ரெட்டியார் பாளையம் ஜெயா நகர், அணைக்கரை வீதி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார்.
அங்கு கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி சாக்கடை சுத்தம் செய்தார். அப்போது அந்த பகுதி மக்களிடம் நானே என்னுடைய சொந்த செலவில் கொசு மருந்து அடித்து தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அதன்படி சொன்ன சொல்படி இன்று தன்னுடைய சொந்த செலவில் இரண்டு பணியாளர்களை அமர்த்தி கொசு மருந்து அணைக்கரை விதி மற்றும் ஜெயா நகர் ஒன்றாவது தெருவில் இருந்து கடைசி தெரு வரை அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவருடன் புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் முருகன் அம்மா பேரவை செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி செயலாளர் தனவேலு கதிர்காமம் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் லூர்துசாமி, முருகன், ஐயப்பன், செல்வமணி, அன்பழகன், சந்தோஷ், பிரசாந்த், ராஜ் ,சிவபாலன், ஜானகிராமன், ராணி, அமலா, சரளா மற்றும் அணைக்கரை குடியிருப்பு வாசிகள் கண்ணன், ராணி, கண்ணன், தெய்வ நாயகம், ரூபி, செல்வி, லதா, வள்ளி, வர்ணா எலிசபெத் கல்பனா ராணி, மாலா, ஸ்வேதா, சுமதி, கதிர், மீனாட்சி லட்சுமி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொசு மருந்து சொந்த செலவில் அடித்து கொடுத்து மக்களை காப்பாற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைச் செயலாளர் லாவண்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார்கள்.