திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,புதுக்கோட்டைமேட்டுத் தெருவில் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், சமேத ஸ்ரீ மதுரைவீரன்சாமி, ஸ்ரீ கன்னிமார்கள்,ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ நாகாத்தாள் சுவாமிகள்கோவில் உள்ளது.

இக்கோவிலின் 57-ம் ஆம் ஆண்டு சாட்டு வழிபாட்டுத் திருவிழா கடந்த 4 -ம்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராஜவாய்க்காலில் இருந்து அம்மனை அழைத்து வருதல் நடைபெற்றது.

தொடர்ந்து தாராபுரம் அமராவதி ஆற்றிலிருந்து அம்மனுக்கு அலகு மற்றும் சங்கிலி பூவோடு எடுத்து வரப் பட்டது.அதனை தொடர்ந்து ஸ்ரீ மதுரைவீரன் உருவாரம் எடுத்து வருதல், கெடா வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு அழைத்தலும் நடைபெற்றது.பிறகு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

அதனை தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது அதனை தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரி நிறுவனரும், ஆன்மீக நெறியாளருமான டாக்டர் ஜெய்லானி கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்

அதில் ஊர் நாட்டாமைக்காரர்கள் மற்றும் நிர்வாக கமிட்டி தலைவர் சு.முருகன்,ஆறுமுகம், செயலாளர் செந்தில் குமார்,சரவணன்,நாராயணன்,சிவக்குமார், பூசாரி தாமோதரன், மற்றும் பூசாரிகள்முருகன்,சங்கிலி ராஜா உள்ளிட்ட பிர
முகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *