சத்தியமங்கலம் அடுத்துள்ள நல்லூரில் கதர் கிராமப்புற கைவினைஞர்கள் தொழிற்பயிற்சி பவானிசாகர் சாலையில் உள்ள தனியார் மரக்கடையில் துவக்க விழா நடைபெற்றது

இதில் சென்னை காதி அதிகாரி சையது கலிமுல்லா கலந்து கொண்டார் அகில இந்திய விஸ்வகர்ம பேரவை கிளை தலைவர் ஆர் கணேசன் கிளைச் செயலாளர் ஆர் மூர்த்தி கௌரவ ஆலோசகர் இளங்கோவன் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புஞ்சைபுளியம்பட்டி காதி சர்வோதய சங்கத்தின் செயலாளர் வேலுமணி கலந்து கொண்டனர்

அகில இந்திய விஸ்வகர்ம பேரவை சார்ந்த 20 நபர்களுக்கு காதி கதர்கிராமபுற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 நாட்கள் பயிற்சி நடைபெறும் எனவும் இந்த பயிற்சிக்கு கர்நாடகாவில் இருந்து பயிற்றுநர்கள் வந்துள்ளனர்

எனவும் இந்த பயிற்சியை முடித்தவுடன் 25 ஆயிரம் மதிப்புள்ள கடைசல் இயந்திரம் மற்றும் 35 சதவீத மானியத்துடன் கடன் உதவி பெற்று தரப்படும் எனவும் இந்த கூட்டத்தில் கூறப்பட்டது இவ்விழாவை அகில இந்திய விஸ்வகர்ம பேரவை கிளைச் செயலாளர் ஆர் மூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *