நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அணைக்கரை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டார் சமூக சேவகரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணைச் செயலாளர் முனைவர் மு லாவண்யா செய்தார் உழவர்கரை தொகுதி மக்கள் மகிழ்ச்சி…
புதுச்சேரி அணைக்கரை வீதி புதுநகர் மக்கள் எங்களது வீட்டை சுற்றியுள்ள புதர்களில் இருந்து பாம்புகள் தேள் மற்றும் எலி போன்ற ஜந்துக்கள் வீட்டுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன மேலும் நாங்கள் இத்தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் புதுச்சேரி உழவுகரை நகராட்சி ஆணையரிடமும் பலமுறை கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் உழவர் கரைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணை செயலாளர் முனைவர். மு லாவண்யா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்று லாவண்யா அவர்கள் போர்க்கால அடிப்படையில் புதர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினார்
இந்த நிகழ்வு அணைக்கரை பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் அணைக்கரை வீதி புதுநகர் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் மகளிர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.