எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 பவுன் தங்க நகைகள்,அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 80 ஆயிரம் பணம் ரொக்கம் திருடிய வழக்கில் கும்பகோணம் சிறையிலிருந்த கொள்ளையனை நீதிமன்ற காவலில் எடுத்து தங்க கட்டி,தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் பாலாஜி நகரை சேர்ந்த சர்க்கரை ஆலை ஊழியர் செல்வேந்திரன் என்பவர் மகளின் பிரசவத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது வீட்டில் கடந்த ஜனவரி 10 ம் தேதி வீட்டின் பின்பக்க கதவுவை உடைத்து பீரோ மற்றும் பெட்டிகளிலிருந்த 125 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 80 ஆயிரம் பணம் ரொக்கம் கொள்ளையடித்த வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிவந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பாத்தூர் பாணாக்கரையை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.இவரை தேடிவந்த நிலையில் வேறொரு திருட்டு வழக்கில் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது
தெரிவந்தது.இதனை அடுத்து கடந்த 11 ம் தேதி நீதிமன்ற காவலில் எடுத்த திருவெண்காடு போலிசார் அவனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.திருடிய தங்க நகைகளை உருக்கி தங்க கட்டியாக மற்றி பதுக்கி வைத்திருந்த ஒரு தங்க கட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 53 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மணிகண்டனை சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.