தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் “பிரவீன்குமார்” அவர்கள் மற்றும் “நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை” நிறுவனர் “ஸ்டார் குரு” அவர்கள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இதில் சங்கத்தின் மாநில தலைவர் நாகபாஸ்கர், மாநில பொதுச்செயலாளர் கருப்பையா, மாநில பொருளாளர் ஜெயராமன் மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..