சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட யாதவ மகாசபை சார்பாக மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் நிர்வாகிகள் எவரெஸ்ட் எம்.கண்ணன், கொள்கை பரப்பு செயலாளர் சீனிவாசன், வர்த்தகரணி நாகராஜ், மணிகண்டன், தினேஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.