பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் கல்லூரிக்கு அதானி சோலார் சார்பில் புதிய கழிப்பறை கட்டிட வசதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள -பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் நினைவு கலைக்கல்லூரியில், அதானி
சோலார் நிறுவனம் சார்பில், மாணவிகள் பயன்பாட்டிற்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில், 8 கழிப்பறை அறைகள் கொண்ட கழிப்பறை கட்டிடம் கட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தர்மர், சோலார் நிறுவன நிர்வாக அதிகாரி வினோத் ஆகியோர் தலைமை தாங்கி திறந்து வைத்தனர் இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்த்தனன் செய்திருந்தார். மேலும் மனிதவளதுறை அதிகாரி மகேந்திரமணி, ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்
