தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேண்டியும் வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன மனுக்களை பெற்றுக்கொன்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நல துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விபத்து மரணம் நிவாரணத் தொகை 2.05 லட்சத்தை ஆறு நபர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூபாய் 1.14 ஆயிரத்து 400 மதிப்பிலான பேட்டரி வீல் சேர் இரண்டு நபர்களுக்கும் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் தனித்துணை ஆசிரியர் சாந்தி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்