எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே புத்தூரில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்துரில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக் கல்லூரியில் கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஷ் (23). இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த செல்வம் (20) ஆகிய இருவரும் BBA மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர் .
இந்நிலையில் செல்வமும் மற்றும் புவனேஷ் ஆகிய இருவரும் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகே எதிரே வேகமாக வந்த லாரி மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர் இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவரின் உடலை மீட்டு கொள்ளிடம் காவல்துறையினர் உடல் உடற்கூறு ஆய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரிக்கு அருகாமையில் இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.