தூத்துக்குடி மாநகராட்சியில் வாரந்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது இந்த முகாமில் மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உள்ள குறைகளை பெற்றுக் கொள்கிறார் சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது
சில மனுகளுக்கு மறுநாள் தீர்வு காணப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் பெறப்பட்ட மனுதாரர்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை தாங்கினார் மாநகராட்சி மேயர் ஜெகன் நான்கு மண்டலத்திற்கு உட்பட்ட 53 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார் மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஆலோசனையின் பெயரில் தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது
பொதுமக்களிடமிருந்து ரோடுகள் வேண்டுமென்று கோரிக்கை மனு வருகிறது அதுவும் தற்போது குறைந்துள்ளது நிறைய பணிகள் நடைபெற்று வருகிறது தூத்துக்குடி மாநகரில் கேரி பை அறவே தவிர்க்க வேண்டும் குப்பைகளை பணியாளர்களிடம் பிரித்து வழங்க வேண்டும் தூய்மை பணியாளர்களும் நம்மளுடைய சக பணியாளராக கருத வேண்டும் குடிநீர் தினசரி வழங்கப்பட்டு வருகிறது
குடிதண்ணீர் விரையம் செய்ய வேண்டாம் கோடைகாலத்திலும் சமாளிக்க முடியும் அளவுக்கு குடிநீர் உள்ளது நிலத்தடி நீர் நன்றாகவே உள்ளது உப்பாக இல்லை மக்களின் பங்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் சாலை ஓரங்களில் மரங்கள் நடப்படுகிறது அந்த மரங்களை பொதுமக்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் வேண்டுகோள் விடுத்தார் நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவியாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்