காங்கேயம் செய்தியாளர் பிரபு.
செல்:9715328420
பெரும் போராட்டத்திற்கு கிடைத்த ஏமாற்றமான வெற்றி, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல கிராமங்களில் கால்நடை வளர்ப்போர் தங்களின் தோட்டங்களில் வளர்க்கும் கால்நடைகள் தெருநாய்களால் தொடர் உயிரிழப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் நேற்று சட்டசபையில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தனர்.
ஆனால் விவசாயிகள் இறந்த கோழிகளுக்கு கிலோ கணக்கிற்கு சந்தை இழப்பீடும், ஆடுகளுக்கு சந்தை மதிப்பீட்டாக ரூ. 13 ஆயிரும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கோழிகளுக்கு ரூ. 200ம், ஆடுகளுக்கு ரூ. 6 ஆயிரமும் அறிவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் கடந்த அனைத்து போராட்டத்திலும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசியல் பிரமுகர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் திமுக அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தனர்.