பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்

பாபநாசத்தில் பாரம்பரிய வீரக்கலை சிலம்ப அறக்கட்டளை சார்பில் கச்சையைக்கட்டு (தகுதி பெல்ட் )தேர்வு விழா 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி தேர்வில் பங்கேற்பு….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்ப அறக்கட்டளை சார்பில் கச்சையைக்கட்டு (தகுதி பெல்ட்) தேர்வு விழா தஞ்சாவூர் மாவட்ட சிலம்ப கழக பயிற்சியாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிலம்பம் ,ஒற்றை கம்பு ,கத்தி சண்டை,வாள் வீச்சு உள்ளிட்ட நான்கு பிரிவு செய்முறைகளை
செய்து காட்டி அசத்தினர்.
இதில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம்நாத் பைரன், குமார், வரதராஜன் ,சாகுல் அமீர், மூத்த பயிற்சியாளர் ராஜமாணிக்கம், தலைமை பயிற்சியாளர்கள் தியாகராஜன்,சுந்தரராமன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தகுதி பட்டை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்