செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள டாக்டர் தத்துராவ் நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
சித்தாமூர் ஒன்றியம் சரவம்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் பாத்வேயின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் சந்திரபிரசாத் மருத்துவ முகாமில் தலைமை தாங்கினார்.
சித்தாமூர் கிராமத் தலைவர் எஸ் குமுதா மதுரை சரவம்பாக்கம் கிராமத் தலைவர் சிவக்குமார் சரவம்பாக்கம் கிராம துணை தலைவர் சுரேஷ் பொலம்பாக்கம் கிராமத் தலைவர் சிவகுமார் சித்தாமூர் துணைத் தலைவர் முத்து,வார்டு உறுப்பினர் மோகன் உள்ளிட்ட பல உள்ளூர் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் டாக்டர் எம். மனோ பிரகாஷ், டாக்டர் எஸ்.அருணா,
டாக்டர் எஸ் தினேஷ் குமார், டாக்டர். காயத்ரி அஞ்சனா பேச்சு சிகிச்சையாளர், சக்தி மகேந்திரன், வி.கார்த்திகேயன் பிசியோதெரபிஸ்ட்,பவித்ரா அர்ஜுனன்,செயல் முறை மருத்துவம் சிகிச்சை நிபுணர் சுமதி ஈஸ்வரன் அரசு கண் மருத்துவம் மற்றும் கண் மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர் எஸ்.விஜயராகவன்,பூர்ணிமா உளவியலாளர், மற்றும் பாத்வே மருத்துவ குழு உள்ளிட்ட நிபுணர்கள் குழு கலந்து கொண்டார்கள்.
இம்மருத்துவ முகாமில் சித்தாமூர், சரவம்பாக்கம்,பொலம்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மிகவும் பயனடைந்தனர்.
கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டு கண்புரை அறுவை சிகிச்சை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
முதற்கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அவர்களின் அறுவை சிகிச்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன. மருத்துவ முகாமின் போது 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவ சேவையில் பயன் பெற்றனர்.