செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், அளத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அளத்துறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.முருகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ப.பரணி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, வட்டாரக் கல்வி அலுவலர் .ஏ.புவனேஸ்வரி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
மேலும் ஆசிரியப் பயிற்றுநர் உதயசங்கர் கலந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பற்றியும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றியும் பேசினர்.
முன்னதாக பட்டதாரி ஆசிரியர் இரா.அருள்ஜோதி அனைவரையும் வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர்கள் வீ. ஜெயமாலினி, ரா.சந்தியா, ப.சுபஶ்ரீ, .த.வெங்கடேசன், ச.திவ்யபாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பசுமைத் தாயகம் அமைப்பு குழுவினர் பந்தல் மேடை ஏற்பாடு செய்தார்கள். பொறுப்பு தலைமையாசிரியர் ரா.ரகுபதி நன்றி கூறினார்.