கரூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். நகை கடைக்கு தேவையான நகைகளை அடிக்கடி கோயம்புத்தூர் சென்று வருவது வழக்கம். தனது கடைக்கு நகைகள் வாங்க செல்லும்போது அருகில் இருக்கும் கடையனருக்கும் நகைகள் வாங்கி வருவார். கடந்த புதன்கிழமை மாலை இவரது ஓட்டுநர் ஜோதி என்பவரை அழைத்துக் கொண்டு ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தங்க நகைகள் வாங்குவதற்காக கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

காங்கயத்தை அடுத்த சம்பந்தம் பாளையம் பிரிவு அருகே வரும்போது வெங்கடேஷின் பின்னால் காரில் வந்த நான்கு நபர்கள் வாகனத்தை மறித்து தாங்கள் போலீஸ் எனக்கூறி வெங்கடேஷ் வந்த காரில் மூன்று நபர்கள் ஏறி உள்ளனர். ஓட்டுநர் இருக்கையில் ஏறிய நபர் வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் அவினாசி பாளையம் டு தாராபுரம் ரோட்டில் செலுத்தியுள்ளார்.

வேங்கி பாளையம் வாய்க்கால் அருகே வரும்போது வாகனத்தை நிறுத்தி வெங்கடேஷிடம் இரண்டு பேக்கில் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தை அவர்கள் வைத்திருந்த மூன்று செல்போன்களையும் பறித்துக் கொண்டு இதுகுறித்து போலீஸ் புகார் அளித்தால் வெங்கடேசன் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு மற்றொரு காரில் ஏறி மூன்று நபர்களும் சென்று விட்டனர்.

இதனால் பயந்து போன வெங்கடேஷ் டிரைவர் ஜோதியுடன் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பணத்தை கொள்ளையடித்துச் சென்றது குறித்தும் அவர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டியதையும் தனது உறவினருடன் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனது உறவினர்கள் ஒன்றும் ஆகாதென உறவினர்கள் கூறியதை தொடர்ந்து நேற்று காலை காங்கயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து முதலில் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது சம்பவம் நடந்த இடம் அவினாசி பாளையம் காவல் நிலை எல்லைக்குட்பட்டது

என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவிநாசி பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் தனிப்படையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் ஓட்டுநர் ஜோதிவேல் என்பவருக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ஜோதியின் நண்பரான கருவூரில் வக்கீல் அலுவலகத்தில் பணிபுரியும் தியாகராஜன் என்பவர் கடனை அடைக்க பணம் கேட்டுள்ளார். தனக்கு அதிக அளவில் கடன் உள்ளதால் பணம் தேவைப்படுவதாக கூறி ஜோதி தான் வெங்கடேஷ் என்பவருக்கு ஆக்டிவ் டிரைவராக செல்வதும் அவர் அடிக்கடி நகை வாங்க கோவை செல்வதாகவும், அப்படி செல்லும்போது தன்னை அழைப்பார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் இருவர் மட்டுமே நகை வாங்க செல்வோம் அப்படி செல்லும்போது பணத்தை கொள்ளை அடிக்கலாம் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட தியாகராஜன் நாம் மட்டும் இதனை செய்ய முடியாது, எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவர் மூலம் செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தியாகராஜன் பணி புரியும் வக்கீல் அலுவலகத்திற்கு வரும் அலாவுதீன் என்பவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக சுமார்4 முறை அலாவுதீன் தனது கூட்டாளிகளுடன் வெங்கடேஷ் கோவைக்கு செல்லும்போதெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார், எங்கெல்லாம் செல்கிறார், எங்கு நகை வாங்குகிறார் என கரூரில் அவரது வீட்டில் இருந்து கோவை செல்லும் வரை பின் தொடர்ந்துள்ளார்.

அதன் பிறகு கடந்த புதன்கிழமை அவர் ஒரு கோடி ரூபாயுடன் வருவதாக ஓட்டுனர் ஜோதி அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஜோதி கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன், குளித்தலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ஸ்ரீகாந்த், மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து ரூ 90 லட்சத்தை மீட்டனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அலாவுதீன் என்பவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே கெட்ட வாயு தலையில் அலாவுதீன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற அவினாசி பாளையம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவிநாசி பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகா மேற்கொண்ட விசாரணையில், அலாவுதீன் குளித்தலையைச் சேர்ந்தவர் என்பதும் இரண்டு வார பத்திரிக்கையில் நிருபராக பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் அரசு அதிகாரிகளை மிரட்டியது உட்பட ஏராளமான வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனை அடுத்து அலாவுதீன் இடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய கார், செல்போன் ரொக்கப் பணம்1.30 லட்சத்தை கைப்பற்றிய போலீசார் அலாவுதீன் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பத்திரிக்கை நிருபர் வழிப்பறி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *