தமிழ்நாடு காவல் துறை,சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு,காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுமார் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற
இப்பேரணியானது,வந்தவாசி சாலை, காவலான் கேட்,கீரை மண்டபம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வந்தடைந்து முடிவுற்றது.
பேரணியில்,”தீண்டாமையை ஒழிப்போம்,மனித நேயம் காப்போம்”,”வேண்டாம் வேண்டாம் சாதியால் வேற்றுமை வேப்டாம்”,”சாதி இன பேதமற்ற புதிய இந்தியாவை உருவாக்குவோம்”,உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவர்கள் கைகளில் ஏந்திக்கொண்டு,கோஷங்களை எழுப்பி வாரு சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மாவட்ட காவல் துணை கண்கானிப்பாளர் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், புள்ளியியல் ஆய்வாளர் ஆறுமுகம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தனசேகரன், புவனேஸ்வரி, தலைமை காவலர் அரிகீர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.