டாக்டர் லோகியா சோஷலிஸ்ட்டுகள் சிந்தனையாளர் அமைப்பின் பிரசுரச்செய்தி
1)ஆங்கிலம் வழி தனியார் பள்ளி களில் ஆரம்ப கல்வியில் சேர்க்கும் மழலை
குழந்தைகள் 25% பேருக்கு தமிழக அரசே( நிதி) சம்பளத்தை
செலுத்துவது பெரும் நிதி சுமையும் தாய்மொழி வழி கொள்கைக்கு எதிரானதாகவும்
உள்ளது.இதனை ரத்து செய்ய வேண்டும் ரத்தசெய்வதால் அரசு,மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்பும் நடை பெறுவதால் அரசு பள்ளிகளில் சேர்க்கை மேலும் கூடுதலாகும் மேலேம்ஆங்கில பள்ளிகளில் இந்தி பாடம் கற்பிக்கும் பள்ளிகளாக பல பள்ளிகள் அமைந்து வருகிறது.
எனவே 25%குழைந்தை களுக்கு அரசு சம்பளம் செலுத்தும் முறை ரத்து செய்ய வேண்டும் இந்த நிதி நமது அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கும்,கூடுதல்மாணவர் சேர்க்கைக்கும் உதவும். 2)அமைப்புசாரா கட்டுமான,தொழிலாளர்,விவசாய தொழிலாளர்கள், வாரிங்கள் பதிவு செய்த தொழிலாளர்,புலம் பெயர்ந்த தொழிலாளர்
நலனுக்கு என்றுதனி இலாக்கா கொண்ட அமைச்சர் அமைய வேண்டும்.
சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிரைவு செய்ய வேண்டும்
3) கருங்குழியி லிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மகாபலிபுரம்
வரை அரசு அமைக்க உள்ள சுற்றுலா மையங்களை இணைக்கும்
நான்கு வழி சாலை விரிவாக்கம் பாராட்டுக்குரியது.
கருங்குழியிலி ருந்து “ஒன்பதாவது கி.மி. தூரத்தில்” அமைந்துள்ள
உலக புகழ்பெற்ற பறவைகளின் சரணாலயமான வேடந்தாங்கல்
வரை சாலை விரிவு படுத்து வதால் சுற்றுலா மையங்கள் இணைக்கப் படுவதுடன்
இப்பகுதிவளர்ச்சியில் பின்னடைந்து உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய
கிராமங்கள் வளர்ச்சிக்கு இந்நசாலை வாய்ப்பாக அமையும், சென்னயிருந்து
GSTசாலையில் கருங்குழியில் துவங்கும் இச்சாலை GSTசாலையில் இணைவதால்
போக்குவரத்து பாதிப்பு நெருக்கடி காலங்களில் இவ்வழி உதவும். மேலும்
வேடந்தாங்கலில் உயிரியல் பூங்கா அமைய அரசின் முயற்சிகள் அமைய
வேண்டும் “கீழ் திருப்தி” என்று அழைக்கப்படும் வைய்யாவூர் மலை கோயில்
மிக அருகாமையில் அமைந்துள்ளது.
4)மருத்தவ துறை யில் சாதனைகளை அமைத்தவர்கள் உலக புகழ்பெற்ற
Dr.பத்திரிநாத் சென்னை சங்கர நேத்தராலயா கண் மருத்துவ
மனை நிருவனர் மற்றும் மே.வங்காளம் பிரிவிணைக்கு முன்பும்,பின்பும் இருமுறை
முதல்வராகவும், சுதந்திர போராட்டத்தில் காந்தியுடன் சிறையில்
இருந்தவரான Dr.B.C.ராய் தலைசிறந்த உலக புகழ்பெற்ற மருத்துவர்.தனது
வருவாய் அணைத்தும் மக்களுக்காக மருத்தவ நலனுக்கும்,, ஆராய்ச்சிக்கும்
அரப்பணித்து உயரியசேவை செய்தவர் Dr.B.C.ராய். இவரின் பெயரில்
சிறந்த மருதுவர் விருது மத்திய அரசு அளித்து சிறந்த மருத்துவர்களை
கவுரவித்வருகிறது.
இவ்விருவரும் மக்களுக்கு சேவை செய்து தங்களது பல கோடி சொத்துக்களை மக்கள் நல்வாழ்வுக்கும் ஆராய்ச்சிக்கும் அர்ப்பனித்தவர்கள் சிறந்த மருத்துவர்களின்
வரலாற்றை மாணவர்கள் அறிய ஆரம்ப பள்ளி மற்றும் உயர் கல்வி பாட நூல்களில்இவர்கள் வரலாறு இந்த கல்வி ஆண்டில் அமைய செய்யவேண்டும்.
5)முதல்வர் மிசா. மு.க.ஸ்டாலின் அவர்கள் அவ்வப் போது மிசா கால கொடுமையான அனுபவங்களை உணர்வுகளாக பகிர்ந்து கொள்கிறார்.
சிறை சென்று எஞ்சியுள்ள சிலராவது ஓய்வூதியம் கிடைக்க தமிழக
அரசு ஆவணம் செய்யவேண்டும். பல மாநிலங்களில் இவர்களுக்கு ஓய்வு திட்டம்
அளிக்கப்படுகிறது.
6)மாநிலத்தில் சாதிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இட ஒதுகீடு
பலன்கள் மக்கள் அடைவார்கள். பாஜக ஆட்சி இருக்கும்வரை மத்திய அரசு கணக்கெடுக்கும் பணிக்கு எதிராக வே இருக்கும். மாநில அரசு இப்பணியை
துரிதப்படுத்த வேண்டும்.
7)கிராமங்களில் ஆரம்ப சுகாதார மய்யங்களிலும்,நகரில் தாலுக்கா
தலைநரில் உள்ளமருத்துவ நிலையங்களில் பக்கவாதநோய்,
தோல் வியாதி அறியும் மருத்துவர்கள் இல்லை.இந்த நோய் பாதிப்பு
கிராமங்களில் கரோனா விற்கு பிறகு பக்கவாத நோய்அதிகரித்து வருகிறது.
நோயை துவக்க நிலையில் அறியாததால் நோய்பாதிப்பும் மரணங்களும் அதிகம் ஏற்படுகிறது.
இத்துறை
மருத்துவர்கள்
நிரந்தரமானவர் களாக இருக்க செய்யவேண்டும்.
8)இரண்டாவது
சுதந்திர போரை
தலைமையேற்று நடத்தியவர்,
முதல்வரின் தந்தை கலைஞர்
.மு.கருணாநிதி
அவர்களின் நெருங்கிய அரசியல் நன்பர்
தேசியம் புகழும்
தலைவர்
“லோக் நாயக்”
ஜெயபிரகாஷ்
நாராயண் அவர்களுக்கு சென்னையில் சிலையும்,
9)விவசாயிகளின்
ஒப்பற்றதலைவர்
திரு.நாரயண
சாமி நாயுடுவின்
நூற்றாண்டு
விழாவை முன்னிட்டு கோவையில்
மணி மண்டபம்
அமையசெய்யவேண்டும்
10)அச்சிறுப்பாக்க ரயில் நிலையத்தில் மாகாத்மா காந்தி
இறங்கி
திரளான மக்கள்
மத்தியில்
சொற்ப்பொழிவு
செய்த வரலாறு உள்ள இடம்
காந்தியின் நிகழ்ச்சியை
ஒருங்கிணைத்தவர்கள் மனித நேயகட்சியின் மாநிலநிர்வாகி
திரு.ஷாஜகான்
அவர்கள் குடும்ப
வழி வந்தவர்கள்
முன்னின்று
செய்துள்ளனர்.
காந்திக்கு
இங்கு மார்பளவு
சிலையும்
நினைவு
மண்டபமும் அமைய அரசு முயற்சி அமைய செய்யவேண்டும்.இது இப்பகுதி
அரசியல் கட்சி கள் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
எங்களின் இந்த கோரிக்கைகள் முதல்வருக்கும் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள்,,உயர்
அதிகாரிகளுக்கும்,சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் அனுப்பப்பட்டள்ளது
. நன்றி அன்புடன்,
மதுராந்தகம்
துரை.பிருதிவிராஜ்
EX.மாநில பொது செயலாளர்
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் (ம)
மாவட்ட தலைவர்.
மாநில ஒருங்கிணைபாளர்
டாக்டர் லோகியா
சோஷலிஸ்ட்
சிந்தனையாளர்கள்
தமிழ்நாடு
9600685197