பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் கீழப்பழூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாலசுப்பிரமணியன் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தேசிய கண்டுபிடிப்பு வாரம் ராஷ்டிரிய அவிஷ்கர் சப்தா என்ற திட்டம் ஊக்குவித்தல் படி பள்ளியில் மரத்தோட்டங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு என்ற செயலின் அடிப்படையில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் வானதி மரக்கன்றுகள் நட்டுவைத்து நீர் மேலாண்மை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டு தனது உரையில் பள்ளி மாணவர்களிடையே காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றை எதிர்கொள்ளும் விதமாக வீடுகள் பள்ளி வளாகம் பொது இடங்களில் அதிகமான மரங்களை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் கோடை காலத்தை சமாளிக்கும் விதமாக நீர் சிக்கனம் மற்றும் நீர் பாதுகாப்பு மேலாண்மை அவசியம் என வலியுறுத்தி எடுத்துக் கூறினார்.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி மரம் வளர்ப்போம் என்ற உறுதி மொழியினை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.இந்தத் திட்டத்தினை ஊக்குவித்தல் தொடர்பாக ஊக்கத்தொகை நான்கு ஆயிரம் வழங்கி மாவட்ட முழுவதும் மேல்நிலை,உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தமாக 15 பள்ளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் ஒன்றிய அளவில் உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளி , புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஆசிரியர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா,பவானி, கவிதா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். ஆசிரியர் செல்லதுரை நன்றி கூறினார்.