கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு.
விழா சிறப்பாக நடைபெற்றது.
விருத்தாசலம் கல்வி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் முத்து.பரமசிவம்
வட்டாரக்கல்வி அலுவலர்கள் லட்சுமி, செல்வி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்சங்கு ஆகியோர் தலைமை வகித்தனர்
பள்ளி தலைமை ஸ்லிம் ஆசிரியர் ராதிகா அனைவரையும் வரவேற்றார்.
நூற்றாண்டு தீச்சுடர் ஏந்தியபடி விழா தொடங்கப்பட்டது.பேரூராட்சித் தலைவர் கந்தன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்ல பாண்டியன், லதாசங்கர், அண்ணா ஜாதி, பாலமுருகன் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருதி பெற்ற கலைமாமணி முனைவர் கவிஞர் மாநிலம்
கல்லூரி (ஓய்வு) செல்வ கணபதி, கிரீடு தொண்டு நிறுவன இயக்குனர் நடனசபாபதி ஆகியோர் வாழ்த்திரை வழங்கினார்.
இவ்விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுநர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள்
கலந்து கொண்டனர்.
பள்ளி ஆண்டறிக்கையை ஆசிரியர் மணிமொழி வாசித்தார். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு காமராசர்
விருது மற்றும் அதற்கான 50 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கமலா நூற்றாண்டு உறுதமொழி வாசிக்க அனைவரும்
உறுதிமொழியை ஏற்றனர்.
தொடர்ந்து பள்ளியில் பணியாற்றி இறந்தவர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது. ஆசிரியர்கள் ராஜமாணிக்கம் முந்தமாலை,அரவிந்தன், தவச்செல்வி மற்றும்
முத்துலட்சுமி சத்துணவு அமைப்பாளர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆசிரியை ஆனந்தி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதல் வகுப்பில் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிரீடு தொண்டு நிறுவனம், பள்ளி
மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ரூபாய் 2,75, 000/-ஐ பள்ளி வளர்ச்சிக்கும் நூற்றாண்டு விழாவிற்கும் மாணவர்களுக்கு பதிசுப் பொருள்கள், ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கியும் விழாவைச் சிறப்பித்தார்கள்.