தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் பராமரிப்பு நிதி உதவி மாவட்ட ஆட்சியர் தகவல் தேனி மாவட்டத்தில் புற்றுநோய் பக்கவாத நோய் தொழு நோய் காசநோய் கண் பார்வை குறைபாடு மற்றும் குள்ளத்தன்மை நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் படை வீரர் நல நிதியில் இருந்து மருத்துவப் பராமரிப்பு நிதியுதவிகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது
இந்நிதி உதவிகள் பெறுவது குறித்து மருத்துவப் பரிசோதனை செய்திட ஏதுவாக தேனி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடையே பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் சுகாதாரம் அவர்களால் புற நோயாளிகள் பிரிவில் 09.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய இரு தினங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது
இந்த முகாமில் புற்றுநோய் பக்கவாத நோய் தொழுநோய் காசநோய் கண் பார்வை குறைபாடு மற்றும் நல்ல தன்மை நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தங்களிடம் உள்ள மருத்துவ சான்று அடையாள அட்டை படை விலகல் சான்று மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்