கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கோடைகால வெப்பத்தின் காரணமாக போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடி, மற்றும் பழச்சாறுகள் வழங்கும் நிகழ்ச்சி விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்றது.
போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போக்குவரத்து பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களுக்கும் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் தர்மாகூல் தொப்பி, கருப்பு கண்ணாடி மற்றும் பழச்சாறுகளை வழங்கினார்.
தொடர்ந்து வெயில் பகுதியில் பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்கள் உடலை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் கடைவீதி ஜங்ஷன் ரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோடை வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு தினமும் பழச்சாறு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்
இதில் போக்குவரத்து தலைமை காவலர்கள் சிவபெருமாள், ஆனந்த்,முத்துக்குமார்,விமல்,சிவக்குமார், செல்வகுமார், வசந்த் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.