தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார்.

ஆணையர் மதுபாலன், முன்னிலை வகித்தாா். மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினாா்.
மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க ஊராட்சி புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இந்த மண்டலத்தில் நடைபெறுகிறது.

பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம் புதிய குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் 5 ஆயிரம் தாா் சாலைகள் உள்ளன. 3 ஆயிரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 ஆயிரம் சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஓதுக்கீடு செய்துள்ளாா்.

இந்த சாலைகள் மாநில அரசு நிதியிலிருந்தும் சில குறுகலான சந்து சாலை ெதருக்களுக்கு பேவர் பிளாக் சாலைகள் மாநகராட்சி வருவாயிலிருந்து அமைக்கப்படுகிறது.

ஓவ்வொரு பகுதிகளிலும் கொடுக்கப்படுகின்ற மனுக்களுக்கு முறைப்படுத்தி சாலைகள் கால்வாய்கள் எனக் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. சில பகுதிகளில 4 5 வீடுகள் தான் இருக்கிறது அப்பகுதிகளுக்கு மக்கள் பங்களிப்பு மாநகராட்சி பங்களிப்பு இணைந்து சில பணிகளை செய்து கொடுக்கிறோம் விடுபட்ட பகுதிகளுக்கும் செய்து கொடுப்போம் 2019ல் சாலை அமைப்பதற்கு கணக்கெடுக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதத்தில் அந்த பணி நடைபெற்று இருக்க வேண்டும். அது நடைபெறவில்லை என்று இங்கு சிலர் கோாிக்கை வைத்தனா்

அந்த பகுதியை மீண்டும் ஆய்வு செய்து முறையாக கட்டமைப்பு பணிகளை செய்து கொடுப்போம் பாதாளசாக்கடை இணைப்பு குடிதண்ணீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. இன்றையதினம் 50மனுக்கள் வரை வந்துள்ளது

அதில் ஓருபிறப்பு சான்றிதழில் எழுத்து பிழைஇருப்பதாக புகார் வந்தது அதை உடனடியாக சாி செய்து கொடுத்துள்ளோம் இது போன்று எல்லா பணிகளும்முறைப்படுத்தி செய்து கொடுப்போம் என்று பேசினாா் பின்னர் சுந்தா்நகர் பகுதியில் உள்ள அரசுகிளை பொது நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.


நிகழ்ச்சியில் இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், நகா்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், குழாய் ஆய்வாளர் நிக்சன், வருவாய் அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலா்கள் சரவணக்குமார், வெற்றிசெல்வன், பட்சிராஜ், ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, முத்துமாாி, விஜயகுமாா், வட்டச்செயலாளர்கள் பிரசாந்த், ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா், பிரபாகர், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாாிச்செல்வம், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *