கும்பகோணம் அல் அமீன் பள்ளியில் ரம்ஜான் பெருநாள் திடல் தொழுகை ஈக்தா ஜமாத் கமிட்டி அறிவிப்பு.
கும்பகோணம் ஈக்தா ஜமாத் கமிட்டியின் கூட்டம் சீமாட்டி முகமது ஜியாவுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
நிர்வாகிகள் அகமது தம்பி, ஜாகிர் உசேன்,பஷீர் அகமது மற்றும் ஒருங்கிணைந்த மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் பெருநாள் கூட்டுத் தொழுகை சிறப்பு என்பது தனித்துத் தொழுவதை
விட 27 மடங்கு சிறந்தது என்று நபி மொழிக்கு ஏற்ப ரம்ஜான் பெருநாள் அன்று திடல் தொழுகை கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறவுள்ளது.
காலை 8 மணிக்கு தக்பீர் வசனங்கள் மற்றும் சொற்பொழி உடன் தொடங்கி சரியாக காலை 8.30 மணி அளவில் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைப்பெறும் என முடிவு செய்யப்பட்டது.
இதில் மார்க்க அறிஞர்கள், ஜமாத்தார்கள் மற்றும் மஹல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கும்பகோணம் ஈத்கா கமிட்டி சார்பில்
தெரிவித்தனர். கூட்டத்தில் பள்ளி ஜமாத் செயலாளர்கள், மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.