பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே பட்டுக்குடியில் சச்சிதானந்த சற்குரு சுவாமிகள 67-ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா-அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை தலைவர் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பட்டுக்குடியில் ஶ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் 67-ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா முன்னாள் சபை செயற்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் மணிவண்ணன், ராமலிங்கம், திருநாவுக்கரசு, ஜெய்சங்கர், துரை, மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் ஏற்பாடுகளை பாட்டுக்குடி சச்சிதானந்த சபை நிர்வாகிகள் கிராமமக்கள் செய்திருந்தனர்