கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள பல்லுயிர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் உணர்திறன் வரைவு அரசாணையால் ஏற்படும் பாதிப்புக்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அந்த வரைவு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை 29.03.2025 சனிக்கிழமையன்று வால்பாறை தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து வால்பாறையிலுள்ளபல்வேறு அமைப்புகளின் பேராதரவுடன் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ள நிலையில் தொழிற் சங்கத்தினர் சார்பாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் வால்பாறையிலுள்ள 21 வார்டு பகுதிகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி தீவிர சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர் மேலும் இந்த போராட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தவும் அதற்க்கான நடவடிக்கைகளை தொழிற்சங்கத்தினர் துரிதப்படுத்தி வருகின்றனர்