தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் குடிதண்ணீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றிற்கான வரிகளை கடுமையாக உயர்த்தி தீர்மானம் வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில்வரி பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர் மேலும் சொத்து வரி உயர்வுக்குப் பின் கட்டணம் செலுத்தாத பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்நிலையில் தற்போது மீண்டும் மாநகராட்சி கூட்டத்தில் சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்தில் மேயர் கூறும்போது, வரி உயர்வு அனைைத்தும் அதிமுக ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்டது. தற்போது வரி உயர்வு பொதுமக்களை பாதிக்காத வகையில் அனைத்தும் சீர் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் ஜெயலட்சுமி, ஜெயராணி, பத்மாவதி, வெற்றி செல்வன் ஆகிய 5பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பக கனி ஆகிய 3 பேரும் சிபிஎம் சார்பில் தனலட்சுமி, சிபிஐ சார்பில் முத்துமாரி. ஆகிய மொத்தம் பத்து கவுன்சிலர்கள் வெளிநாடு செய்தனர். மேலும் மாநகராட்சி கூட்டத்தில் அஜெண்டாவில் நான்காவது மற்றும் ஐந்தாவது திருமணங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் இன்றி திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்களுக்கும் வெளிநாடு போய் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.