திருவள்ளூர்
மாதவரம் தொகுதி காரனோடை ஊராட்சியில் உள்ள சோழவரம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெகு விமர் சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஊராட்சி ஒன்றியம் காரனோடை ஊராட்சியில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கி ஆண்டறிக்கை யை மற்றும் பள்ளியின் வளர்ச்சி கள் குறித்து சிறப்புரையாற்றி னார்.நிகழ்ச்சியினை ஆசிரியை எஸ்.சரோஜா தொகுத்து வழங்கி னார்.விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
பின்னர் பள்ளியில் சிறப்பாக பயின்று மற்றும் பல் வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் சான்றி தழ்கள் பதக்கம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளர்களாக சோழவரம் வட்டார கல்வி அலுவலர் முத்து லட்சுமி, காரனோடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன், அரிமா சங்க உறுப்பினர்கள் சங்கர், ரவிக் குமார், சுரேஷ், மோகன், சுரேஷ், ரோட்டரி கிளப் தலைவர் சுதாசிவ க்குமார், காரனோடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன், வார்டு உறுப்பினர் மகேஷ், முன் னாள் மாணவர் வினோத், சோழ வரம் பள்ளி ஆசிரியர் உமா, மாத வரம் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி,மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் உமா, ஒரக்காடு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அன்னை பார்வதி மஹால் உரிமையாளர் ஜெயச்சந் திரன், காரனோடை ஊராட்சி மன்ற செயலாளர் சேதுபதி, பள்ளி யின் ஆசிரியர் பெருமக்கள் மற் றும் மாணவ மாணவி பெற்றோர் கள் கிராமத்தினர் என பலர் கல ந்து கொண்டனர். முடிவில் ஆசிரி யை டி.கவிதா நன்றி கூறினார்.