பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அரசினர் பலவகை தொழில்நுட்பக்
கல்லூரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு விழா..
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ரெகுநாதபுரத்தில் உள்ள அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு விழா கல்லூரி முதல்வர் லதா தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக கல்வி மற்றும் விளையாட்டு, வேலைவாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரபாண்டியன், உமாதேவி, சந்திரசேகரன் ,
சுவாமிநாதன், கோவிந்தராஜன் மற்றும் காவல் துறையினர் ,கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.