கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை கரூர் மற்றும் சுரபி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் ஒன்றிணைந்து குளுக்கோமா எனும் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை, கரூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இப்பேரணியானது கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் துவங்கி , கோவை சாலை வழியாக வையாபுரி நகர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வரை நடைபெற்றது .
கண் அழுத்த நோய் என்பது பார்வை நரம்புக்கு சேதம் ஏற்படுவதால் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் மேலும் கண்ணில் திரவ அழுத்தம் அதிகரிப்பதன் மூலமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பார்வை இழப்பு நிரந்தரமாகிவிடும் என்பது பற்றிய விழிப்புணர்வு, கரூரில் முதன் முதலாக டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை பேரணி முலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் கரூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை கண் மருத்துவர்கள் சுகன், நூபுர் அஸ்கோன்கர், சுரபி கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ மாணவியர் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துமணை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.