தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்.
இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவர்களுக்கு பேனா, பென்சில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வழங்கினார்கள்.
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பேனா. பென்சில் ஸ்கேல் போன்ற பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா அவர்களின் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல் அணியின் மேற்கு மாவட்ட அமைப்பாளர் செந்தில்நாதன், இலக்கியம்பட்டி எம். வெங்கடேஷ், கணேஷ், பிரவீன் குமார்,பெரியண்ணன், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்! எனக் கூறினார்கள்.