வலையபூக்குளம் அங்கன்வாடி மையம் திறப்புவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியனில் உள்ள வலையபூக்குளம் கிராமத்தில் கோவை லட்சுமி மில் GKD Charitable Trust ன் சார்பில் 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிமுடிக்கப்பட்டது அதனை பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் தலைமையில் திறக்கப்பட்டது

இவ்விழாவில் கமுதி வடக்கு ஒன்றியச் செயலாளர் V.வாசுதேவன், கமுதி வட்டாட்சியர், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ) மற்றும் (வ.ஊ) மற்றும் கிராமப் பெரியோர்கள், பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..