இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலையில் தினந்தோறும் அதிகளவில் பனை மரங்களை வெட்டி அழிக்கும் போக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.
குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழிலுக்காக விளை நிலங்களில் வளர்ந்திருக்கும் பனை மரங்கள் அதிகமாக வெட்டி அழிக்கப்படுகிறது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது. பனை மரத்தை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.
இந்நிலையில் பனை மரக்காடுகளை செங்கல் சூளைகளின் எரி பொருள்களுக்காக வெட்டி அழிக்கும் செயல் பல இடங்களில் சத்தம் இல்லாமல் அரங்கேறி வருகிறது. பொதுவாக பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு முன்பாக வருவாய்த் துறையின் அனுமதி பெற்று வெட்ட வேண்டும்.
ஆனால் இது போன்ற விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற உரிய முறையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.